2012-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு


2012-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த நடிகைக்கான விருதை மெரில் ஸ்ட்ரீப் வென்றுள்ளார். தி ஐயன் லேடி திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது.

சிறந்த நடிகருக்கான விருதை தி ஆர்ட்டிஸ்ட் படத்தில் நடித்த ஜீன் டுஜார்டின் வென்றுள்ளார். சிறந்த இயக்குநருக்கான விருது தி ஆர்ட்டிஸ்ட் படத்தை இயக்கிய மைக்கேல் ஹவானாவிகியூஸ் வென்றுள்ளார்.

சிறந்த ஒரிஜினல் ஸ்கிரீன்பிளேவுக்கான விருதை மிட்நைட் படத்துக்காக வூடி ஆலனுக்கு கிடைத்துள்ளது.

சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான விருது ஈரான் நாட்டு திரைப்படமான எ செபரேஷன் திரைப்படத்துக்கு கிடைத்துள்ளது.