லோக்கல் சேனல் விவகாரத்தில் முதல்வர் தலையிட வேண்டும் நடுநிலை கேபிள்டிவி நல சங்கம் கோரிக்கை

லோக்கல் சேனல் விவகாரத்தில் முதல்வர் தலையிட வேண்டும் என நடுநிலை கேபிள்டிவி நல சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.நடுநிலை கேபிள்டிவி ஆப்ரேட்டர்கள் நல சங்கம் மற்றும் விழப்புரம் மாவட்ட சங்கத்தின் மாநில தலைவர் ரகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அவர் கூறியதாவது "
கடலுர்,விழுப்புரம் மாவட்டங்களில் புயலால் பாதிக்கபட்ட 64 ஆப்ரேட்டர்களுக்கு 12 ஒ,எப்,சி இலவசமாக வழங்கபடும்,தற்போதைய உள்ளுர் சேனல் மூலம் வருங்காலங்களில் பெரும் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு முறைபடுத்த வேண்டும் எங்கள் சங்கத்தின் சார்பில் இனிவரும் காலங்களில் பூமியில் கேபிளை புதைக்கும் முறையை பயன் படுத்த தீர்மானிக்கபட்டுள்ளது
சங்கரன்கோயில் இடைதேர்தலில் அதிமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்ய முடிவு செய்யபட்டுள்ளது"
 உடன் செயலர் இந்திரஜித்,பொருளாளர் மணி உள்ளிட்ட பலர் இருந்தனர்