- Back to Home »
- சூரிய ஒளியில் »
- சூரிய ஒளியில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க இலக்
சென்னை,
சூரிய ஒளியில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க இலக்கு நிர்ணயித்து, அதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்கான கருவிகள் முதல் கட்டமாக (சோலார் போட்டோ-வோல்டாய்க் பேனல்) 2000 அரசு கட்டிடங்களில் நிறுவப்பட உள்ளன.
தமிழ்நாடு எரிசக்தி மேம் பாட்டு முகமை, இந்த கருவிகளை பொருத்துவதற்கான அரசு கட்டிடங்களை தேர்வு செய்துள்ளது. சென்னையில் மட்டும் 1000 கட்டிடங்களில், சூரிய ஒளி மின்சார உற்பத்தி கருவிகள் அமைக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் 3 லட்சம் வீடுகளுக்கும், ஒரு லட்சம் தெரு விளக்குகளுக்கும், “சூரிய ஒளி” மின்சாரம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக இந்த ஆண்டு 60 ஆயிரம் வீடு களுக்கும், 20 ஆயிரம் தெரு விளக்குகளுக்கும் சூரிய ஒளி மின்சாரம் அளிக்க, தமிழ்நாடு எரி சக்தி மேம்பாட்டு முகமை திட்டமிட்டுள்ளது. இதுபற்றி இம்முகமையின் பொது மேலாளர் சீனிவாஸ் சங்கர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் வீட்டு மாடிகளில் குறிப்பாக பல அடுக்குமாடி கட்டிடங்களில் சூரிய ஒளி மின்சார உற்பத்தி கருவிகளை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி வீட்டின் உரிமையாளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சில நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. இதற்கான செயல் திட்டம் தயாரித்து அனுப்பி அரசிடம் அளித்துள்ளோம்.
இதன் மூலம் அரசின் சூரிய ஒளி மின்சக்தி கொள்கைக்கு உயிரூட்ட முடியும். பொது சுகாதார மையங்களில், சூரிய ஒளி மின்சக்தி வாட்டர் ஹீட்டர்களும் அமைக்கப்பட உள்ளன. பெங்களூரில் உள்ள பெரும்பாலான வீடுகளில் இந்த வாட்டர் ஹீட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
