தாவணிக்கு டாட்டா
அரசு பள்ளி மாணவிகளுக்கு
 இனி சல்வார் கமி'ஸ் உடைதான்


சென்னை

தமிழக முதலமைச்சர்  ஜெ ஜெயலலிதா , மாநிலத்திலுள்ள அனைத்துக் குழந்தைகளும் தரமான கல்வியை,  அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் நிறைந்த இன்பமான  சூழ்நிலையில் பெறுவதற்கான  பல்வேறு முன்னோடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

இதன் அடிப்படையில் 2012-13 ஆம் கல்வியாண்டு முதல் தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள், நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பள்ளிகள் ஆகியவற்றில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ்  1வது  வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு, தற்பொழுது வழங்கப்பட்டு வரும் இரண்டு இணை சீருடையுடன் கூடுதலாக இரண்டு இணை சீருடை அதாவது மொத்தம் நான்கு இணை சீருடை வழங்க  தமிழக முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார்.   இதில் 6ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் பயிலும் மாணவர்களுக்கு அரைகால் சட்டைக்கு பதிலாக முழுக் கால்சட்டையும், மாணவியர்களுக்கு பாவாடை தாவணிக்குப் பதிலாக சல்வார்-கமீசும் வழங்க  தமிழக முதலமைச்சர்ஜெ ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார்  இதன் மூலம் 23 லட்சத்து 
33 ஆயிரத்து 418 மாணவர்களும், 23 லட்சத்து 51 ஆயிரத்து 660 மாணவிகளும் என மொத்தம் 46 லட்சத்து 85 ஆயிரத்து 78  பள்ளி மாணவ மாணவியர் பயன் பெறுவர். இதனால் அரசுக்கு  259 கோடியே 95 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.

    மேலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 1வது வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ, மாணவியருக்கு இலவசமாக ஒரு இணை காலணி வழங்க  தமிழக முதலமைச்சர்  ஜெ ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார். இதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1வது வகுப்பு  முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் 35 லட்சத்து 556  மாணவ, மாணவியர், ஒவ்வொருவருக்கும்  
96 ரூபாய் மதிப்பில், 1 இணை காலணியும், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும்  27 லட்சத்து 95ஆயிரத்து 639 மாணவ, மாணவியர், ஒவ்வொருவருக்கும் 127 ரூபாய் மதிப்பில்,  1 இணை காலணியும், 9 மற்றும் 10 ஆம் வகுப்பு  பயிலும் 18 லட்சத்து 5ஆயிரத்து 933  மாணவ மாணவியர், ஒவ்வொருவருக்கும் 142 ரூபாய் மதிப்பில்  ஒரு இணை காலணியும், இந்த ஆண்டே வழங்க  தமிழக முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்

இந்த விலையில்லா காலணி வழங்கும் திட்டத்திற்காக அரசுக்கு 94 கோடியே 76 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும். இதன் மூலம்  81  லட்சத்து 2 ஆயிரத்து 128 மாணவ, மாணவியர் பயன் பெறுவர். 

இவையன்றி, மாணவ, மாணவியர்களிடம் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளை நீக்கும் நல்லெண்ணத்துடன், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் ஒரே மாதிரியான புத்தகப் பைகள், கற்றலுக்குத் தேவையான கணித உபகரணப் பெட்டி அதாவது ழுநடிஅநவசல க்ஷடிஒ, கிராமப்புற மாணவ, மாணவியருக்கு இதுவரை கிடைக்கப் பெறாத வண்ணப் பென்சில்கள் மற்றும் புவியியல் படங்கள் ஆகியவற்றை  வரும் கல்வியாண்டு முதல், அதாவது 2012-13 முதல் வழங்கவும் தமிழக முதலமைச்சர்  ஜெ ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார்.

இத்திட்டத்தின்படி 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு 
75 ரூபாய் மதிப்புள்ள புத்தக பைகளும், 4 முதல் 7ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு 100 ரூபாய் மதிப்புள்ள புத்தக பைகளும்,  8 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு 125 ரூபாய்  மதிப்புள்ள புத்தக பைகளும் வழங்கப்படும்.  இத்திட்டத்தினால்  92 லட்சத்து 28 ஆயிரத்து 374 மாணவ, மாணவியர் பயன் பெறுவர்.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -