தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் விழா சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை கழகத்தில் கொண்டாடப்பட்டது
. இவ்விழாவில் தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவரும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் . பிரேமலதா கலந்து கொண்டனர்
. உடன்  மாநில நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மகளிரணியினர் மற்றும்  தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 இவ்விழா நாதஸ்வர மங்கள இசையுடன் துவங்கியது
. அதைத் தொடர்ந்து தமிழர்களின் பாரம்பரிய கலைகளான ஒயிலாட்டம், தப்பாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் மற்றும் நாட்டுப்புறப் பாடல்கள் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது
இவ்விழாவில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் பொங்கல் வைத்து ஜாதி, மத பேதமின்றி சமத்துவப் பொங்கலாக கொண்டாடினர்.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -