கேரளா பந்த்

இயல்பு வாழ்க்கை முடங்கியது

சென்னை,  


முல்லைபெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட வலியுறுத்தியும், தமிழக அரசை கண்டிததும் கேரளாவில் இன்று காலை பந்த் தொடங்கியது.


கேரள அரசு முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட தமிழக அரசு தடையாக இருப்பதாக குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் கேரள மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் ஒற்றுமையை எடுத்துகாட்டும் விதமாக ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கு சமரா சமிதி என்ற அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.

இதையடுத்து இன்று காலை முதல் கேரளாவில் பெரும்பாலான இடங்களில் அரசு பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் முற்றிலும் செயல்படவில்லை. கேரளாவில் உள்ள ஆளும் காங்கிரஸ் அரசும் ஆதரவு தருவதால் கேரளாவிற்குள் எந்த வாகனமும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக தமிழகத்தில் இருந்து தோட்ட தொழிலாளர்கள் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள முந்திரி உள்பட பல பொருட்கள் அழியும் நிலைஉள்ளது. பயணிகளும்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பொங்கலுக்காக உறவினர் வீடுகளுக்கு வந்தவர்கள் திரும்பி செல்ல முடியாமல் ஆங்காங்கே பஸ், கார்களிலேயே தங்கியுள்ளனர்.

குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் பந்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.விமான மற்றும் ரயில் சேவைகள் இய்ங்கினாலும் பயணிகள் வெளியில் வந்து தங்கள் விரும்பி இடத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

                                                                                                  மேனகா

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -