மதுரை : தாய் புலிகள் இயக்கம் 
"உலக வரலாற்றில் ஒரு புனிதருக்கு ஒரே நாளில் எவரது அழைப்பும் இன்றி பலலட்சம் மக்களை வரவழைக்கும் சக்தியை உடைய பசும்பொன் முருகன் ஸ்ரீ முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் கோவில் அமைந்துள்ள பசும்பொன்னில் சோறு அரசியல் செய்யும் சிலரது போக்கை நாங்கள் வன்மையாகக் கண்டிப்பதோடு வரும் ஆண்டு அங்கே ' சுய மரியாதை உணவகம்" ஒன்றை அமைக்க உள்ளோம். அதற்கான இடம் பசும்பொன்னில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஒருலட்சம் பேருக்கு அன்னதானம் என்ற வாசகத்தை மட்டுமே பெரிதாக்கி வெறும் சோற்றுக்கு கூடும் கூட்டமாக தேவரினத்தை காட்டி சாப்பிட வரும் கூட்டத்தை படமெடுத்து அரசியல் வியாபாரம் செய்யும் போக்கினை தடுக்கும் விதமாக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
                                           மேலும் மண்ணாசை , பொன்னாசை, பெண்ணாசை துறந்த தெய்வீக திருமகன் மண்ணில் பெண்களை வைத்து குத்தாட்டம் போடவைக்கும் சிலரது புத்திக்கு தக்க பாடத்தை தேவரின இளையோர்கள் காட்ட வேண்டும். இந்த " சுய மரியாதை உணவகத்தில் " இரண்டு ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை உணவுகள் விற்கப்படும். இந்த உணவுகள் தாய் புலிகள் இயக்கத்தினரின் மேற்பார்வையிலும் "தேவர் கோவில் பக்த குழு சுவாமிகள் " முழு ஒத்துழைப்போடும் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். இந்த சுய மரியாதை உணவகத்தில் பங்கெடுக்க விரும்புவோர்கள் உங்கள் விவரத்தினை "thevarist@gmail.com" என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் தகவலையும் கருத்துக்களையும் தெரிவிக்கவும்.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -