சென்னை மெரீனாவில் மக்கள் வெள்ளம்

                           தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கலான இன்று சென்னை                   களை கட்டியது. குடும்பம் குடும்பமாக காணும் பொங்கலை கொண்டாடினார்கள்.

மெரீனா கடற்கரை, எல்லியட்ஸ் பீச், அரசு பொருட்காட்சி, கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்கா, பெரம்பூர் பூங்கா, கிழக்கு கடற்கரை சாலை, மாமல்லபுரம் போன்ற பகுதிகளில் மக்கள் அலை அலையாய் திரண்டுள்ளனர்

மெரீனாவில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் .  சிறுவர்களை ஆடி, பாடச்சொல்லி பெற்றோர்கள் மகிழ்ந்தனர். சிலர் மெரீனாவில் சமையல் செய்து அங்கேயே சாப்பிட்டதை காணமுடிந்தது. பஸ், வேன், கார்களில் வந்து மக்கள் மெரீனா கடற்கரையில் வந்து மகிழ்சியை பகிந்துகொண்டுள்ளனர்

காணும் பொங்கலையொட்டி ஏராளமான திடீர் கடைகளும், வியாபாரங்களும் மும்முரமாக . மாலையில் கூட்டம் பல மடங்கு அதிகரித்தது. மெரீனாவில் பொது மக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரை யோரத்தில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. தடுப்பு வேலியை சுற்றி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
. சுமார் 2500 போலீசார் மெரீனாவில் மட்டும் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் குதிரை படை வீரர்களும் கடற்கரையில் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

எல்லியட்ஸ் கடற்கரையிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அசைவ, சைவ உணவுகளை விதவிதமாக சமைத்து கொண்டு வந்து கடற்கரையோரம் சாப்பிட்டு மகிழ்ந்தனர். அங்கு கடலில் குளிக்கவும் அனுமதி அளிக்கப்படவில்லை. கிண்டி சிறுவர் பூங்கா மக்கள் கூட்டத்தால் திணறியது. காணும் பொங்கலை கொண்டாட இளம் தம்பதியினரும், காதல் ஜோடியினரும் பூங்காவில் திரண்டனர்.

 . வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆயிரக்கணக்கானவர்கள் குவிந்தனர். சென்னையை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் இருந்து கார், வேன்களில் மக்கள் வந்திருந்தனர். 

இதேபோல் அரசு பொருட்காட்சியிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. கடற்கரைக்கு வந்திருந்தவர்கள்  பொருட்காட்சியை கண்டுகளித்தனர். நடக்க கூட இடம் இல்லாத அளவிற்கு மைதானம் நிரம்பி வழிந்தது. எல்லா பொழுதுபோக்கு மையங்களிலும் கூட்டம் அதிகம் காணப்பட்டது
. பெரம்பூர் மேம்பாலம் அருகில் புதிதாக உருவாக்கப்பட்ட பூங்காவிலும், கொளத்தூர், பெரம்பூர், கொடுங்கையூர், அயனாவரம், மூலக்கடை, வியாசர்பாடி பகுதி மக்கள் இந்த பூங்காவில் காணும் பொங்கலை திருவிழா போல் கொண்டாடினர்.

அங்குள்ள இசை நீர்வீழ்ச்சியை சிறுவர்கள், இளைஞர்கள் ரசித்தனர். வடசென்னை மக்கள் குழந்தைகளுடன் இந்த பூங்காவில் பொழுதை கழித்தனர். இதேபோல அண்ணா நகர் டவர் பூங்கா, சுதந்திர தினப்பூங்கா உள்ளிட்ட எல்லா பூங்காக்களிலும் மக்கள் கூட்டம் மிகுதியாக இருந்தது. பொதுமக்கள் கூடும் பகுதியில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -