எம்.ஜி.ஆரின் 95-வது பிறந்த நாள் விழா அதிமுக கொண்டாட்டம்
 
எம்.ஜி.ஆரின் 95-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது
சென்னை அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் இன்று காலை 10.45 நடந்த விழாவில், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்- அமைச்சருமான ஜெயலலிதா கலந்து கொண்டார். அவருக்கு கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

பின்னர் தலைமைக் கழக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அனிவித்து   எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா சிறப்பு மலரை வெளியிட்டார் முதல் பிரதியை மாநில மீனவர் அணி செயலாளர் கலைமணி பெற்றுக்கொண்டார். 

 விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளை தலைமைக் கழகத்தில் இருந்தபடியே 'வீடியோ கான்பரசிங்' மூலம் முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார். ஏழ்மை நிலையில் உள்ள கல்லூரி மாணவ- மாணவிகள் 115 பேரின் உயர் படிப்புக்காக 45 லட்சத்து 57 ஆயிரத்து 493 ரூபாய் நிதி உதவிகளையும் ஜெயலலிதா வழங்கினார்.

மறைந்த கட்சி தொண்டர் வாசுதேவன் குடும்பத்துக்கு அவரது மனைவி ஜெயந்தியிடம் ரூ. 1 லட்சம் வழங்கினார். அதைத் தொடர்ந்து கட்சி வளர்ச்சிக்காக முதல்- அமைச்சர் ஜெயலலிதாவிடம் நிதி வழங்கப்பட்டது. அமைச்சர்கள் கே.வி.ராமலிங்கம், பழனியப்பன் ஆகியோர் ரூ. 1 கோடியே 6 லட்சம் வழங்கினார்கள். நத்தம் விஸ்வநாதன், செந்தில்பாலாஜி ஆகியோர் ரூ. 1 கோடியும், தேனி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் ரவீந்திரநாத் குமார் ரூ. 52 லட்சமும் வழங்கினார்கள்.

இதன் மூலம் மொத்தம் ரூ. 4 கோடியே 64 லட்சம் கட்சி வளர்ச்சி நிதியாக வழங்கப்பட்டது. எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில் அகில உலக எம்.ஜி.ஆர். மன்ற செயலா ளர் தமிழ்மகன் உசேன் 5 ஆயிரம் பேருக்கு பொங்கல் வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

எம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி அ.தி.மு.க. தலைமைக் கழகம் கொடி களாலும், தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டி ருந்தன. 

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -