- Back to Home »
- எதுவுமே உண்மையில்லை - ரவிச்சந்திரன். , ஏகப்பட்ட வதந்திகள் »
- ஏகப்பட்ட வதந்திகள், எதுவுமே உண்மையில்லை - ரவிச்சந்திரன்.
விஸ்வரூபம்' படத்துக்கு அடுத்த படியாக கமல் ஆஸ்கார் ஃபிலிம்ஸுக்குத்தான் படம் பண்ணப்போகிறார் என்ற செய்தி வெளியானவுடன், நகுல் படம், ஜெயம்ரவி படம் டிராப் என்று ஆஸ்கார் ஃபிலிம்ஸைச்சுற்றி ஏகப்பட்ட வதந்திகள். ஆனால் அந்த வதந்திகளில் ஜெயம்ரவி படத்தின் டைரக்டர் கல்யாண் மாற்றப்பட்டதைத்தவிர வேறு எதுவுமே உண்மையில்லை என்கிறார் ஆஸ்கார் ரவிச்சந்திரன். அதிலும் கல்யாண் தான் மாறியிருக்கிறாரே தவிர ஜெயம் ரவி எங்கள் நிறுவனத்துக்குத் தந்த கால்ஷீட் அப்படியேதான் இருக்கிறது. இந்த புராஜெக்டுக்கு ஒரு நல்ல டைரக்டரை ரவி தரப்பும், நாங்களும் தேடி வருகிறோம். அதே போல் 'ஈரம்' அறிவழகன் இயக்கிவந்த நகுலின் 'வல்லினம்' படத்தையும் நான் டிராப் பண்ணி விட்டதாக வந்த தகவல்களும் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. அந்தப் படத்தின் படப்பிடிப்பு 60 சதவிகிதம் முடிவடைந்துவிட்டது. பிறகு எப்படி அதை டிராப் பண்ண முடியும்? என்று வதந்தியாளர்களை வருத்தத்தோடு கேட்கிறார் ரவிச்சந்திரன்.