- Back to Home »
- நம்நாடு மக்கள் மீட்பு பேரவை - வழக்கறிஞர் பிரிவு 15 நபர்கள் தீக்குளிப்பு? »
- முல்லை பெரியாறு -மதுரை : நம்நாடு மக்கள் மீட்பு பேரவை வழக்கறிஞர் பிரிவு 15 நபர்கள் தீக்குளிப்பு?
முல்லை பெரியாறு மதுரை நம்நாடு மக்கள் மீட்பு பேரவை வழக்கறிஞர் பிரிவு 15 நபர்கள் தீக்குளிப்பு?
இன்று மாலை ஆறு மணியளவில் முல்லைப் பெரியாறு குறித்து கேரளா அரசையும் , உச்ச நீதிமன்றம் தீர்ப்பினை
மதிக்காத கேரளா அரசின் மீது நடவடிக்கை எடுக்காத உச்ச நீதிமன்றத்தையும் கண்டித்து மீனாட்சி மகளிர் கல்லூரி அருகே உள்ள மேம்பாலத்தின் கீழ் மெழுகுவத்தி ஏந்தி பொதுமக்கள்
முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில்மதிக்காத கேரளா அரசின் மீது நடவடிக்கை எடுக்காத உச்ச நீதிமன்றத்தையும் கண்டித்து மீனாட்சி மகளிர் கல்லூரி அருகே உள்ள மேம்பாலத்தின் கீழ் மெழுகுவத்தி ஏந்தி பொதுமக்கள்
வழக்கறிஞர் திரு. தமிழரசன் திரு.மாசானம், திரு .ஜெகதீசன் , டாக்டர் சங்கீதா , முன்னாள் ராணுவ வீரர் திரு.சபரிநாதன் , திரு .பரமசிவன் , திருமதி தமிழரசி (நுகர்வோர் கவுன்சில் உறுப்பினர் ) ஆகியோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் " 142 அடியாக அணையினை உயர்த்துதல் , கேரளா அரசின் தவறிற்கு தக்க பாடத்தை உச்ச நீதிமன்றம் வழங்க வேண்டும் போன்ற கோசங்கள் எழுப்பப்பட்டன . ஆர்ப்பாட்டம் முடியும் தருணத்தில் வழக்கறிஞர்கள் " இந்தப் போராட்டம் இன்று முதல் இன்னும் ஒரு வார காலத்திற்கு இதே இடத்தில் தொடருமெனவும், வரும் வெள்ளிக் கிழமை நம்நாடு மக்கள் மீட்பு பேரவை வழக்கறிஞர் பிரிவினர் சுமார் 15 நபர்கள் மதுரை நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து உச்ச நீதிமன்றத்திற்கு எதிரான எமது எதிர்ப்பை பதிவு செய்வோம் " என்றும் கூறி உள்ளனர்.
