அனைவருக்கும் தேவர் தொலைக்காட்சி சார்பாக விடுக்கும் முக்கிய செய்தி:

நமது தேவர் தொலைக்காட்சி எந்த ஒரு இயக்கத்தின் மூலமாகவோ அல்லது  ஒரு குழுவின் மூலமாகவோ ஆரம்பிக்கப் பட்டது அல்ல. தனி நபரால் தனி ஒருவரின்  முயற்சியால் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பான ஆதரவோடு (கட்சியோ , இயக்கமோ அல்ல ) செயல்பட்டுவரும் தேவரினத்தார் இணையவழி  ஊடகம். தங்களுக்கு கூறவிருக்கும் முக்கிய செய்தி : "தற்போதைய நாள்வரை பணமாக யாரிடமும் நன்கொடையை பெற்றது கிடையாது. நமது தொலைக்காட்சிக்கு நிதி வழங்குங்கள் எனவும் , நாங்களே இயக்குகின்றோம் எனவும் கூறி சிலர் நன்கொடை வசூலிப்பதாக எமக்கு செய்திகள் வந்துள்ளன." எனவே உறவுகள் தேவர் தொலைக்காட்சி பெயரில் எந்த சூழலிலும் யாருக்கும் நிதியோ , பொருளோ வழங்கவேண்டாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் தேவர் தொலைக்காட்சியின் பெயரில் பணமோ, புகழோ கிடைக்குமென்ற எண்ணத்தில் யாரும் தவறான காரியத்தில் இறங்குவது உங்களை கீழ்நிலைப்படுத்திவிடும் என்பதை உங்களுக்கு ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி 

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -