- Back to Home »
- முல்லைப் பெரியாறு அணையை நோக்கி 20 ஆயிரம் விவசாயிகள் பேரணி »
- முல்லைப் பெரியாறு அணையை நோக்கி 20 ஆயிரம் விவசாயிகள் பேரணி – எல்லையில் பதற்றம்
தேனி மாவட்டம் கூடலூர் சுற்று வட்டாரப்பகுதியைச் சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று குமுளி நோக்கி பேரணியாக சென்று முல்லைப் பெரியாறு அணையை முற்றுகையிட முயன்றனர்.
தேனி மாவட்ட போலீசார் அவர்களை எல்லையில் தடுத்து நிறுத்தியதால் பதற்றம் எழுந்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட கேரளா அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. அணை இடிக்கப்பட்டால் தமிழ்நாட்டில் தேனி, மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் விவசாயம் பொய்த்துவிடும் என்பது தமிழக விவசாயிகளின் ஆதங்கம்.
கடந்த இருவார காலமாக தமிழ்நாடு- கேரளா எல்லைப் பகுதிகளில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ள முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சினை போராட்டம் தீவிரமடைந்துள்ளது. கடந்த சில தினங்களாக கடைகளை அடைத்து போராட்டம் நடத்திய கூடலூர் பகுதி மக்கள், திடீரென்று முல்லைப் பெரியாறு அணையை நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.
20 ஆயிரம் விவசாயிகள்
20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் அலைகடலென திரண்டதால் அங்கு பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருந்த போலீசாரும், துணை ராணுவப் படையினரும் அவர்களை தடுத்து நிறுத்தினர். இருப்பினும் விவசாயிகள் பின்வாங்காமல் அணையை முற்றுகையிடப்போவதாக தெரிவித்தனர்.
மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்
இதனிடையே பேரணியாக சென்ற விவசாயிகளை தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் பழனிச்சாமி, தென்மண்டல ஐஜி ராஜேஸ்தாஸ் ஆகியோர் சமாதானப்படுத்தினர். கேரளா எல்லை மூடப்பட்டு விட்டதால் அணையை நோக்கி பேரணியாக யாரும் செல்லவேண்டாம் என்று கேட்டுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர், உடனடியாக அவரவர் வீட்டுக்கு திரும்பி செல்லுமாறும் அவர் வலியுறுத்தினார்.
இருப்பினும் அதனை கேட்காத விவசாயிகள் அணையை நோக்கி முன்னேறி சென்றனர். கேரள அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பிய அவர்கள் கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டியின் உருவ பொம்மையையும் எரித்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் எழுந்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தேனி மாவட்டத்தில் தொடர்ந்து கேரளாவிற்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. தமிழக எல்லைப் பகுதியான கூடலூரில் இன்று 5,000 மக்கள் பேரணியாகப் புறப்பட்டு கேரளாவின் குமுளி நோக்கி செல்லும் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
அப்போது அதைக் காவல்துறை தடுத்து நிறுத்த முயன்றும் அதையும் மீறி மக்கள் குமுளியை நோக்கிச் சென்ற வண்ணம் உள்ளனர்.