திருக்கோவிலூரில்  தற்போது நடந்த பேரூராட்சி தேர்தலில் தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தேவி முருகன் நிர்வாகத்தை சிறப்பாகவும், திறம்படவும் செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் களமிறங்கியுள்ளார்.
இன்று பொறுப்பேற்கவுள்ள நிலையில் எதிலும் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவோடு இரவாக வெள்ளை அடிக்கப்பட்டது. 
நேற்று அதிகாலை புரோகிதர்களைக் கொண்டு கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

சமீப காலமாக ஊழியர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டதும், நிர்வாகத்தில் ஏற்பட்ட குளறுபடியை போக்கவும், புதிய நிர்வாகம் சிறப்பாக செயல் படவும் இந்த ஹோமம் நடத்தப்பட்டதாக பேரூராட்சி ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


இதில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -