டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
’’டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த மற்றும் தற்காலிக பணியாளர்கள் சி மற்றும் டி பிரிவுகளை சார்ந்த அலுவலர்கள் அனைவருக்கும் 2010-11-ம் ஆண்டிற்கான 8.33 சதவீத போனசும், 11.67 சதவீத கருணை தொகையும் ஆக மொத்தம் 20 சதவீத போனஸ் வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவின்படி, ஏறத்தாழ 29 ஆயிரம் டாஸ்மாக் நிறுவன பணியாளர்கள் மொத்தம் ரூ.20 கோடியே 92 லட்சம் ரூபாய் போனசாக பெறுவார்கள்’’ என்று கூறப்பட்டுள்ளது.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -