- Back to Home »
- கண்ணாடிகள் உடைப்பு , பேருந்துகள் எரிப்பு »
- பேருந்துகள் எரிப்பு, கண்ணாடிகள் உடைப்பு, காவல்துறையின் மெத்தனத்திற்கு பொதுமக்கள் கொடுத்த பதிலடி!
கடந்த 13-09-2011 அன்று தெய்வீகத் திருமகன் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் சிலையை அவமதிப்பு செய்ததை அடுத்து பல்வேறு சாத்வீக முறைகளை கையாண்ட பொதுமக்கள் குற்றவாளிகளை கைது செய்யாததை கண்டித்து நேற்று இரவு நான்கு பேருந்துகள் எரிக்கப்பட்டும் , சில பேருந்துகள் கண்ணாடிகள் உடைக்கப்பட்டும் தன்னுடைய எதிர்ப்பை மீண்டும் பதிவு செய்துள்ளனர். போராட்ட முறை தவறாக உள்ளதென்றாலும் அரசு இந்த விடையத்தில் அக்கறை காட்டாது இருப்பது மக்களுக்கு ஆத்திரத்தினை உண்டாக்குவது இயல்பே. எனினும் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பையும் பேருந்து எரிப்பில் ஏற்படவில்லை. இந்த நிகழ்வையடுத்து முக்குலத்தோர் மக்கள் கட்சியின் சார்பாக அதன் பொதுச்செயலாளர் திரு .காத்திக் கரிகால தேவர் " அரசு உடனே சிலையை அவமதித்த செல்வத்தையும் அவனது கூட்டாளிகளையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் . இந்நிலை தொடர்ந்தால் சட்ட ஒழுங்கு சீர்குலைய நேரிடும். இது அரசியல் லாபத்திற்காக தூண்டிவிடப்பட்டதை உணர்ந்து அரசு உடனே தலையிட்டு எங்களுக்கு உரிய தீர்ப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" என்று தனது அறிக்கை எமக்கு வழங்கியுள்ளார்.
