கண்ணீர் புகைக்குண்டு வீச்சுகளின் போது பாதுகாப்புக்காகப் பயன்படுத்தப்படும் 500 மூகமூடிகளை சிறலங்கா காவல்துறை அவசரமாக கொள்வனவு செய்யவுள்ளது.

இதற்காக சிறிலங்கா காவல்துறை கேள்விப்பத்திரங்களை கோரியுள்ளது.

வாயுக்கவசங்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

அண்மைக்காலத்தில் சிறிலங்கா படையினர் மற்றும் காவல்துறையினருக்கு எதிராக பொதுமக்கள் நடத்தும் போராட்டங்கள் அதிகரித்துள்ள நிலையிலேயே சிறிலங்கா காவல்துறை இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இத்தகைய போராட்டங்கள் மேலும் அதிகரிக்கலாம் என்ற புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளதாலேயே அவசரமாக இவற்றைக் கொள்வனவு செய்ய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -