- Back to Home »
- மதுரை விமான நிலையத்திற்கு தேசியத்தலைவர் தேவர் திருமகனாரின் பெயரை »
- மதுரை விமான நிலையத்திற்கு தேசியத்தலைவர் தேவர் திருமகனாரின் பெயரை வைக்கக் கோரி மத்திய அரசிடம் வலியுறுத்தி கோரிக்கை ஆர்ப்பாட்டம் .
மதுரை விமான நிலையத்திற்கு தேசியத்தலைவர் தேவர் திருமகனாரின் பெயரை வைக்கக் கோரி மத்திய அரசிடம் வலியுறுத்தி கோரிக்கை ஆர்ப்பாட்டம் .
மதுரை விமான நிலையத்திற்கு தேசியத்தலைவர் தேவர் திருமகனாரின் பெயரை வைக்கக் கோரி மத்திய அரசிடம் வலியுறுத்தி கோரிக்கை ஆர்ப்பாட்டம் .
இன்று காலை தேவர் பேரவை இளைஞர் அணி சார்பாக பொதுச்செயலாளர் பசும்பொன் திரு முத்தையாத்தேவர் அவர்களின் தலைமையில் சென்னை , மெமோரியல் ஹால் முன்பாக சரியாக பத்து முப்பது மணிக்கு தொடங்கிய ஆர்ப்பாட்டம் மிக நேர்த்தியான முறையில் நடைபெற்றது. இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தின் பொருட்டு தேவர் பேரவை வெளியிட்ட அறிக்கை:

" மதுரையில் உள்ள விமான நிலையத்திற்கு தேவர் திருமகனாரின் பெயரை வைக்கக் கோரி தேவர் சமுதாயம் தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தியும் இதுவரை செவி சாய்க்காத மத்திய அரசின் இந்த செயல் தேவரின மக்களின் மனதை புண்படுத்திய செயலாக இருக்கின்றது.
மேலும் இந்திய திருநாட்டின் சுதந்திரத்திற்க்காக வாழ்நாளில் மூன்றில் ஒருபகுதியை சிறையில் கழித்த தியாக தீபம். தன்னுடைய சொந்த சொத்துக்கள் முழுவதையும் தாழ்த்தப்பட்ட ஏழை மக்களுக்கு வாரி வழங்கிய மகான்.
மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் கருவறை வரை தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துச்சென்றவர் . இது மட்டுமல்ல, பெண்களை பராசக்தியின் மரு உருவமாக மதித்து வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்யாமல் வாழ்ந்துகாட்டியவர். வங்கத்துச் சிங்கம் நேதாஜியால் தென்னாட்டு போஸ் என்று அழைக்கப்பட்டவர். இதுமட்டுமல்ல , சாதி மதத்திற்கு அப்பார்ப்பட்டு வாழ்ந்தவர்.இப்படியெல்லாம் வாழ்ந்து மறைந்த தேசியத் தலைவரின் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு வைப்பதில் மத்திய அரசு தொடர்ந்து புறக்கணிப்பதன் காரணமாக மத்திய அரசின் காதுகளுக்கு எட்டும் வகையில் தமிழ்நாடு தேவர் பேரவை இளைஞர் அணி மாநில பொதுச்செயலாளர் பசும்பொன் மு.முத்தையாதேவர் அவர்கள் தலைமையில் இன்று இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது" - தேவர் பேரவை இளைஞர் அணி