- Back to Home »
- அகத்தியர் , ஆரூடம் , மின் நூல் »
- அகத்தியர் ஆரூடம் - நிறைவுப் பகுதியும்,மின்னூலும்.
அகத்தியர் ஆரூடத்தில் கடைசி ஆறு எண்களுக்கான பலன்களை இன்று பார்ப்போம்.
௫௯.(59) வந்தால்..
அஞ்சாதே கேளமப்பா ஆரூடத்தை
அனுதினமும் தோத்தரிப்பாய் நவக்கிரகத்தை
சஞ்சலங்கள் விலகுமப்பா தனமேசேரும்
தட்டாது உன்வார்த்தை மேன்மையாகும்
கொஞ்சநாள் இதுவரையில் கஷ்டப்பட்டாய்
கோபத்தால் பலபொருளும் நஷ்டப்பட்டாய்
வஞ்சகக் காரர்களால் வருத்தமுற்றாய்
வழுத்தினேன் இவ்வாரம் கழியத்தானே.
ஆரூடத்தில் ஐம்பத்தி ஒன்பது