Showing posts with label அகத்தியர். Show all posts
செங்கடுக்காய் கற்பம்
சித்த மருத்துவத்தில் மகத்துவமான மூலிகைகளில் கடுக்காயும் ஒன்று. இது மரவகையைச் சேர்ந்தது. இந்த மரங்கள் உள்ள நிலம், அதன் தன்மை மற்றும் அதன் காயின் வடிவத்தைப் பொறுத்து கருங்கடுக்காய், செங்கடுக்காய், வரிக்கடுக்காய், பால்கடுக்காய் என பலவகைகளாக கூறப் பட்டிருக்கிறது. இவை ஒவ்வொன்றும் தனித்துவமான மருத்துவ குணங்களைக் கொண்டவை. செங்கடுக்காய் கற்பம் ஒன்றினை செய்திடும் முறையினை இன்றைய பதிவில் பார்க்க
குருவைத் தேடி....
"குரு பரம்பரை" என்கிற இந்த ஒற்றை தத்துவத்தின் மீது கட்டமைந்ததுதான் சித்தரியல். இங்கே குரு ஆதியும், அந்தமும் ஆனவர். அவருக்கு மிஞ்சியது என எதுவும் இல்லை. எல்லாம் அவரால் ஆனதே, அவரன்றி ஓரணுவும் அசையாது என்பதைப் போன்ற ஆழ்ந்த சத்தியமான கருத்தாக்கங்களின் வழி நிற்பதுதான் நம் சித்தர்களின் பாரம்பரியம். இந்த அடிப்படைகளுக்கு எவரும் விதிவிலக்கில்லை. ஆதி குருவான சிவனில் துவங்கி அவருடைய அணுக்க சீடர்களின் வழி
நாகப்பாம்பினை கட்டும் மந்திரம்
விலங்கின வகைப் பட்டியியலில் "நாஜா" என்கிற பிரிவில் "எலாப்பிடே" என்ற குடும்பத்தைச் சேர்ந்தது நாகப் பாம்பு. இவை பெரும்பாலும் வெப்ப மண்டல பகுதிகளில் மட்டுமே வாழ்கின்றன. மிகவும் கொடிய நஞ்சுடைய இந்த பாம்பு நல்ல பாம்பு என்றும் அழைக்கப் படுகிறது. இவை தீண்டினால் மரணம் நிகழும் வாய்ப்புள்ளது.
இயற்கையோடு இணைந்த பெருவாழ்வினை வாழ்ந்த நம் முன்னோர்கள் இத்தகைய விலங்குகளை துன்புறுத்தாமலும், அதே நேரத்தில்
Tag :
அகத்தியர்,
கட்டும் மந்திரம்,
புண்களை குணமாக்கும் மேற்பூச்சு
உடலில் ஏற்படும் புண்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஒரு மருந்தினை அகத்தியர் அருளியிருக்கிறார். இதனை காயங்களின் மீது மேற் பூச்சாக பூசி வந்தால், எல்லா வகையான புண்களும் ஆறிவிடுமாம். இந்த தகவல் அகத்தியர் அருளிய "அகத்தியர் இரணவைத்தியம்" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.
முருங்கை யிலையும் முன்னையுந் தும்பையும்
அரிக்கையும் நீலியும் அத்தியும் வேம்புடன்
எருக்குஞ் செருப்படி பேயத்தி வேலியும்
Tag :
அகத்தியர்,
சித்த மருத்துவம்,
அகத்தியர் அருளிய வெள்ளி பற்பம் (பஸ்பம்)
பற்பம் அல்லது பஸ்பம் என்பது சாம்பலைக் குறிக்கும். சித்த மருத்துவத்தில் தேவையான சரக்குகளை தனியாகவோ அல்லது சேர்த்தோ புடம் போட்டோ, வறுத்தோ, எரித்தோ, ஊதியோ வெளுக்கும் படி சாம்பலாக செய்வதையே பற்பம் என்கிறோம். இந்த பற்பங்கள் பல வகைப் படும். தேவைக்கு ஏற்ப உலோகங்களை அல்லது நவரத்தினங்களைக் கொண்டு பற்பங்களை தயாரிக்கும் முறையினை நமது முன்னோர்கள் அருளியிருக்கின்றனர்.
வெள்ளியை பற்பமாக்கும் ஒரு முறையினை
Tag :
அகத்தியர்,
சித்த மருத்துவம்,
விஷக் கடி வைத்தியம்
பாம்பு, தேள், பூரான், தேனீக்கள், வண்டுகள், எலி போன்ற உயிரினங்கள் தீண்டினால் நம் உடலில் பரவும் விஷத்தை முறிக்கவும், அதன் தீவிரத்தைக் குறைக்கவும் பல்வேறு வகயான எளிய தீர்வுகளை நம் முன்னோர்கள் கைக் கொண்டிருந்தனர். இது தொடர்பில் முன்னரே சில தகவல்களை இங்கு பகிர்ந்திருக்கிறேன். அந்த வரிசையின் இன்று அகத்தியர் அருளிய மருந்தொன்றினைப் பற்றி பார்ப்போம்.
இந்த தகவல் அகத்தியர் அருளிய "அகத்தியர் பரிபூரணம்"
Tag :
அகத்தியர்,
விஷக்கடி வைத்தியம்,
அரு மருந்தாகும் தூதுவளை லேகியம்
சமஸ்கிருத மொழியில் உள்ள அவலேஹம் என்கிற சொல்லே நாளடைவில் மருவி 'லேகியம்' என்றானது. தூய தமிழில் இதனை இளகல் அல்லது இளகம் என்று அழைப்பதே சரியானது. பொதுவில் லேகியம் என்பவை தண்ணீரைப் போலவோ, அல்லது குழம்பு போலவோ இல்லாமல் கெட்டியான நீர்ம நிலையில் இருக்கும். நோய் தீர்க்கும் இந்த இளகங்களைப் பற்றி நம் முன்னோர்கள் அருளிய பல்வேறு முறைகளை முன்னரே பகிர்ந்திருக்கிறேன். அந்த வரிசையில் இன்று தூதுவளை லேகியம்
வசிய திருநீறு...
கோவிலில் இறைவனை தரிசித்த பிறகும், பெரியவர்கள், ஆன்றோர்களை சந்தித்து விடை பெறும்போதும் அவர்கள் விபூதி வழங்கி ஆசிர்வதிப்பது காலம் காலமாய் நடைமுறையில் இருக்கும் ஒரு வழக்கம். கால ஓட்டத்தில் பெரியவர்களிடம் விபூதி வாங்கிடும் பழக்கம் அருகி விட்டாலும், கோவிலில் இந்த மரபு இன்றும் வழக்கில் இருக்கிறது. இந்த விபூதியானது அதனை அணிந்து கொள்கிறவர்களை தீவினைகளில் இருந்து காப்பாற்றும் கவசமாய் இருப்பதுடன்,
ஈரேழு பதினாலு உலகங்களையும் பார்த்திட....!
"ஈரேழு பதினாலுலோகம்" என்றொரு சொற்றொடரை நம்மில் பலரும் கேள்விப் பட்டிருப்போம். இந்து வேத மரபில் மொத்தம் பதின்நான்கு உலகங்கள் இருப்பதாக நம்பப் படுகிறது. அவை நாம் வாழும் இந்த பூமி என்கிற பூலோகத்தின் மேலும் கீழுமாய் அமைந்திருக்கின்றன. பூமியின் மேலே ஆறு உலகங்களும், பூமியின் கீழே ஏழு உலகங்களும் இருக்கின்றனவாம்.
இந்த பதின்நான்கு உலகங்களையும் நம் கண்களால் பார்ப்பது எப்படி என்கிற தகவலைத்தான் இன்றைய
Tag :
அகத்தியர்,
அஞ்சனா தேவியின் அருளைத் தரும் மந்திரம்.
சித்தர் பெருமக்கள் வணங்கிய ஒரு பெண் தெய்வத்தைப் பற்றியும், அந்த தெய்வத்தின் அருளை பெறுவதற்கான மந்திரம் மற்றும் தந்திரத்தை இன்றைய பதிவில் பார்க்க இருக்கிறோம். சித்த மரபில் வாலை என்கிற பெண் தெய்வ வழிபாடு பற்றி முந்தைய பதிவுகளில் பார்த்திருக்கிறோம். வாலை தெய்வம் எத்தனை சக்தி வாய்ந்தது, அதன் மகத்துவம் பற்றிய தகவல்களை இந்த இணைப்பில் சென்று வாசிக்கலாம்.
இன்று நாம் பார்க்க இருக்கும் தெய்வத்தின்
நலம் பல தரும் "சண்முகயந்திரம்"
எதிர்பாராத நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் பதிவுகளை குருவருளினால் எழுதத் துவங்கி இருக்கிறேன். அந்த வகையில் இந்தப் பதிவினை தமிழ் கடவுளாம் முருகனை பணிந்து அவரைப் பற்றிய ஒரு தகவலுடன் துவங்குகின்றேன்.
எங்கும் நிறைந்திருக்கும் இறையருளை யந்திர வடிவில் வழிபடும் வழக்கம் நம்மிடையே காலம் காலமாய் இருந்து வருகிறது. இலங்கையில் கதிர்காமம் கோவிலில் மூலவர் யந்திரமாகவே இருக்கிறார். இது பற்றிய தகவல்களை
நந்தி தேவரை தரிசிக்கும் முறை!
சித்தர்கள் மரபில் ஆதி குருவான சிவனின் நேரடி சீடராக அறியப் படுகிறவர் நந்தி. இவரை நந்தி தேவர், நந்தீசர் எனவும் குறிப்பிடுகின்றனர். நந்தி என்றால் எப்போதும் பேரானந்த நிலையில் இருப்பவர் என பொருள் கூறப் படுகிறது . சித்த மரபின் இரண்டாவது குருவாக அறியப் படும் இவரே திருமூலரின் குருவாக விளங்கியவர்.
இத்தனை சிறப்புகள் வாய்ந்த நந்தி தேவரை அகத்தில் தரிசிக்கும் ஒரு முறையினையே இன்று பார்க்க இருக்கிறோம்.
தும்பிக்கையான் பாதம் பணிவோம்!
"காணபதம்" அல்லது கணாபத்யம் என்றழைக்கப் படும் மரபின் தனிப் பெருங் கடவுளான விநாயகரின் அவதார தினம் இன்று. ஒவ்வொரு வருடம் ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தி திதி விநாயகரின் அவதார தினமாக கொண்டாடப் படுகிறது. ஆறு வெவ்வேறு வழிபாட்டு மரபுகள் ஒன்றிணைந்து இந்து மதமாய் உருவெடுத்த போது விநாயகர் இந்து மதத்தின் முழு முதற் கடவுளாக அங்கீகரிக்கப் பட்டார்.
ஓம்காரத்தின் சூட்சும வடிவம்தான் விநாயகர் என்று சொல்வோரும்
அகத்தியர் அருளிய சூரணங்கள்.
தேவையான சரக்கினை சுத்தம் செய்து, வெயிலில் நன்கு உலர்த்தி, அதனை அடுப்பிலேற்றி வறுத்து, அதனை இடித்து சலித்து எடுப்பதையே சூரணமாக்குதல் என்கிறோம்.சித்த மருத்துவத்தில் இத்தகைய பல சூரணங்கள் கூறப் பட்டிருக்கின்றன. இவற்றில் திரிகடுகம் எனப்படும் "சுக்கு", "மிளகு", "திப்பிலி" சூரணங்களை மாமருந்துகள் என்றால் மிகை இல்லை.
இந்த மூன்று பொருள்களையும் கொண்டு திரிகடுக சூரணம், திரிகடுக லேகியம், திரிகடுக குளிகை,
Tag :
அகத்தியர்,
சித்த மருத்துவம்,
மாதவிலக்கும், சித்தர்கள் அருளிய தீர்வுகளும்!
இதுவரை மாதவிலக்கு, மாதவிலக்கு சுழற்சி, அவற்றின் இயங்கியல், ஏற்படும் பிரச்சினைகள் என விரிவாகவே பார்த்து விட்டோம். இந்த தகவல்கள் யாவும் நவீன அறிவியல் நமக்கு கண்டறிந்து சொன்ன உண்மைகள். இனி நம் முன்னோர்கள் இந்த பிரச்சினைகளை எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்பதைப் பற்றியே பார்க்க இருக்கிறோம். மாதவிலக்கு பிரச்சினைகள் தொடர்பில் நிறைய தகவல்கள் சித்தர்களின் பாடல்களின் ஊடே காணக் கிடைக்கிறது.
இந்த தகவல்களை
தேகநலம் தரும் வெள்ளி பற்பம்.
சித்த மருத்துவத்தில் தேவையான சரக்குகளை தனியாகவோ அல்லது சேர்த்தோ புடம் போட்டோ, வறுத்தோ, எரித்தோ, ஊதியோ வெளுக்குபடிச் செய்து எடுத்துக் கொள்வது பற்பம் அல்லது பஸ்பம் எனப்படும். உலோகங்களை பற்பமாக்கி அவற்றை மருந்தாகக் கொடுக்கும் வழக்கம் சித்தரியலில் உண்டு. ஆயுர்வேத மருத்துவத்திலும் கூட ஏழு வகையான பற்பங்கள் குறிப்பிடப் பட்டிருக்கின்றது.
அந்த வகையில் அகத்தியர் அருளிய "அகத்தியர் வைத்திய காவியம்" என்ற
குழந்தைப் பேறு!... அகத்தியரின் தீர்வு!!
தாய்மையே ஒரு பெண்ணை பூரணத்துவமானவளாக ஆக்குகிறது என்கிற நம்பிக்கை நமது சமூகத்தில் வேரோடியிருக்கிறது. திருமணம் ஆன ஒவ்வொரு பெண்ணும் அவளது சுற்றமும் இந்த தாய்மை அடைதலை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பது தொட்டுத் தொடரும் பாரம்பரிய நிகழ்வு.
ஒரு வேளை அதே பெண்ணிற்கு தாய்மை அல்லது கருவுறுதல் தாமதமானால் கொஞ்சமும் ஈவிரக்கம் இல்லாத அவளின் சமூகம், அந்த பெண்ணிற்கு தரும் பட்டம் ”மலடி”, இது காலம் காலமாய் பெண்கள்
உடலுக்கு வலிமை தரும் சந்தனாதி தைலம்.
எள் + நெய் என்பதே எண்ணெய்யாகும். எண்ணெய் என்பது நல்லெண்ணையையே குறிக்கும். எள் என்பதை 'திலம்' என்று வடமொழியில் கூறுவர். திலத்தால் உண்டானதை தைலம் எனக் கூறுவர். தேவையான சரக்குகளைப் பொடித்து எள் நெய் சேர்த்துப் பக்குவத்தில் காய்ச்சி எடுப்பதே எண்ணெய் அல்லது தைலம் எனப்படும்.
இவ்வாறு தயார் செய்யப்படும் தைல வகைகளில் ஒன்றான "சந்தனாதி தைலம்" தயாரிக்கும் முறை ஒன்று அகத்தியர் அருளிய "அகத்தியர் வைத்திய
Tag :
அகத்தியர்,
சித்த மருத்துவம்,
படர்தாமரைக்கு ஓர் எளிய தீர்வு!
தோலில் ஏற்படும் தொற்று நோய்களில் முதன்மையானது “படர்தாமரை” எனப்படும் ஒரு வகையான தேமல் ஆகும். இது உச்சந்தலை, முகம், பிறப்பு உறுப்புகள் ஆகிய இடங்களில் படர்ந்து பரவும் தன்மையுடைய தொற்று நோயாகும்.
இத்தகைய தேமல் பரவிய இடங்களில் தோல் நிறமாற்றம் அடைந்து அடர் கருப்பு நிறமாகி விடும். தீராத அரிக்கும் தன்மை உடைய இதனை சொறிந்து விட்டால் அதிலிருந்து வெளியாகும் நீர்மத்தினால் இது மேலும் உடலின் மற்ற பாகங்களில்
Tag :
அகத்தியர்,
சித்த மருத்துவம்,
தீவினை அழிக்கும் புவனை யந்திரம்...
சித்தர்கள் வணங்கிய தெய்வத்தின் பெயர் வாலை என்பதாகும். ஆதி சக்தியின் பத்து வயது பெண் வடிவமே இந்த வாலை. வாலையை பூசிக்காத சித்தர்களே இல்லையெனலாம். வாலை தெய்வத்தைப் பற்றி மேலதிக விவரம் வேண்டுவோர் இந்த இணைப்பில் சென்று வாசிக்கலாம்.
புவனை அம்மன் என்பவள் இந்த புவனமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் மகாசக்தியின் அம்சமாவாள். வாலை தெய்வம் குழந்தையின் அம்சமென்றால், புவனை அவளின் தாய் அம்சம் என்கின்றனர்