தரிசனம் என்பதன் ஆரம்பத் தகவல்களை நேற்றைய பதிவில் பார்த்தோம். நமது ஆன்மீகத்தை பொறுத்த வரை தரிசனம் என்பது கடவுளை காண்பதாகவே சொல்லப் படுகிறது.நமது புராண கதைகளில் கூட கடவுளின் காட்சி என்பது சிலிர்ப்பினை உண்டாக்கும் வகையில் நயமான வருணனைகளுடன் கூறப் பட்டிருக்கிறது.மனித உருவில் நான்கு கைகளுடன், எடைக்கு எடை தங்க, வைர வைடூரிய நகைகளை அணிந்தவராக, ஒளிவெள்ளத்தில் மிதந்தவாறு அருள் நிறைந்த முகத்தோடு காட்சி