- Back to Home »
- அகத்தியர் , ஆரூடம் , ஜோதிடம் »
- அகத்தியரின் பாய்ச்சிகை ஆரூடம் - 6,1,1 முதல் 6,2,6 வரையிலான பலன்கள்..
6,1,1.
கூடுமென்றே நினைத்து குதூகல மடைந்திடாதே
நாடிய வாறீரென்றும் நஷ்டமேயாகுமப்பா
பாடுபட்டே நீ சேர்த்த பொருளது ஒழியுமப்பா
வாடிடவேண்டா மின்னும் வாரமிரெண்டேக வேணும்.
ஆறும், அடுத்தடுத்து இரண்டு முறை ஒன்றும் விழுந்திருப்பதால் நன்மை உண்டாகுமென குதூகலமடையாதே. பாடுபட்டு சேர்த்த பொருள் அழியும். இரண்டு வாரம் கழிந்தால் நன்மை உண்டாகும் என்கிறார்.
6,1,2.
வேணமென்றே நீ செய்யும் வேலையில் லாபமுண்டாம்