நந்தி தேவரை தரிசிக்கும் முறை!



சித்தர்கள் மரபில் ஆதி குருவான சிவனின் நேரடி சீடராக அறியப் படுகிறவர் நந்தி. இவரை நந்தி தேவர், நந்தீசர் எனவும் குறிப்பிடுகின்றனர். நந்தி என்றால் எப்போதும்  பேரானந்த நிலையில் இருப்பவர் என பொருள் கூறப் படுகிறது . சித்த மரபின் இரண்டாவது குருவாக அறியப் படும் இவரே திருமூலரின் குருவாக விளங்கியவர்.


இத்தனை சிறப்புகள் வாய்ந்த நந்தி தேவரை அகத்தில் தரிசிக்கும் ஒரு முறையினையே இன்று பார்க்க இருக்கிறோம்.