வள்ளல் பெருமானின் மறைவு!



1874ம் வருடம் ஜனவரி 30ம் தேதி, வள்ளல் பெருமான் தன்னுடைய அணுக்கத் தொண்டர்களுக்கு அருளாசி வழங்கி விட்டு, தான் பத்து பதினைந்து தினங்கள் தனியறை ஒன்றில் இருக்கப் போவதாகவும், அறையின் கதவைத் திறக்க வேண்டாமெனவும், அப்படித் திறந்து பார்த்தால் யாருக்கும் எதுவும் தெரியாது. வெற்று அறையாகத்தான் இருக்கும் என்று சொல்லிவிட்டு, இரவு 12 மணி அளவில் சித்தி வளாகத்தில் இருந்த மாளிகையின் அறையொன்றில் நுழைந்தார்.