வள்ளல் பெருமானும் அமைப்புகளும்....



வள்ளல் பெருமானார் வாழ்ந்த காலத்தே சமூக அமைப்பும் எவ்வாறு இருந்தது என்பதை இந்த தொடரின் முந்தைய பதிவுகளில் பார்த்திருந்தோம். 


சமூக அமைப்பானது உயர் சாதியினர், அவர்களுக்கு அடுத்த நிலையில் இருந்த இடை நிலை சாதியினர், கீழ்நிலை அல்லது தாழ்த்தப் பட்ட சாதியினர் என மூன்று பெரும் பிரிவுகளில் அடங்கி இருந்தது. இதில் உயர் சாதியினரே இறைவனின் பிரதிநிதிகளாகவும், சமயம் குறித்த தீர்மானங்களை, சடங்குகளை,