- Back to Home »
- அருட்பா மருட்பா , ஆறுமுக நாவலர் , வள்ளலார் »
- அருட்பா, மருட்பா விவகாரம்.
சைவ சமயத்தில் பக்தி இலக்கியங்கள் என்றால் அவை திருமந்திரம், திருவாசகம், திருப்புகழ் ஆகியவையே. இவை யாவும் பக்தியில் உயர்ந்து சிறந்து தெய்வீக நிலைக்கு உயர்ந்த பெருமக்களினால் அருளப் பட்டவை என்பது குறிப்பிடத் தக்கது. இதன் பின்னர் இயற்றப் பட்ட பாடல்கள் யாவும் பிரபந்த திரட்டுகள் எனவும், அதற்கும் பிந்தைய காலத்து பாடல்கள் பாடல் திரட்டு என்றே குறிப்பிடப் பட்டு அடுத்தடுத்த நிலைகளில் வைக்கப் பட்டன.