- Back to Home »
- வள்ளலார் »
- வள்ளல் பெருமான் கண்டெடுத்த ஆன்மிகம்
வள்ளல் பெருமானின் ஆன்மிகம் என்பது அவர் தன் அனுபவங்களின் ஊடேயான பாரபட்சமில்லாத தேடல்களின் முடிவில் தெளிந்த ஓர் நிலை. இதனை அவரது பாடல்களின் ஊடே பயணிக்கும் எவரும் அறிந்து கொள்ள முடியும். கடவுளின் மீது கவனம் வைத்து அவரைத் தன் மனத்தே இருத்தி அவரின் அருளை இறைஞ்சியிருப்பதே தன் பக்தியின் பூரண நிலை என கருதியிருந்தவர், சென்னையை விட்டு கிளம்பிய பின்னர் தான் சந்தித்த மனிதர்கள், எதிர் கொண்ட பிரச்சினைகள்,