தேரையர் அருளிய வல்லாதி லேகியம்



அவலேஹம் என்கிற சமஸ்க்ருதச் சொல்லே மருவி 'லேகியம்' என்றானது. தமிழில் இதனை இளகல் அல்லது இளகம் என்று அழைப்பர். பொதுவில் லேகியம் என்பவை கெட்டியான குழம்பு போல இல்லாமல் சற்றே இறுகிய நீர்ம நிலையில் இருக்கும்.


வல்லாதி லேகியம் தயாரிக்கும் முறையினை இன்றைய பதிவில் பார்க்க இருக்கிறோம். வல்லாதி என்பது சேங்கொட்டையைக் குறிக்கும். இதன் தாவரவியல் பெயர் “Semecarpus anacardium” என்பதாகும். இது இயல்பில் நச்சுத்