ஆதியில் நம் முன்னோர்கள் தம்முடைய உணவு மற்றும் வாழ்விடத் தேவைகளை முன் வைத்து இயற்கையோடு இணைந்த பெருவாழ்வினை மேற் கொண்டிருந்தனர். இத்தகைய வாழ்விடங்கள் பெரும்பாலும் ஆற்றங்கரைகளை ஒட்டியோ அல்லது வனப் பகுதிகளை ஒட்டியோ அமைந்திருந்தன.
இத்தகைய வாழ்வாதார சூழலில், அவர்களுக்கு சவாலாய் இருந்த காரணிகளில் முதன்மையானது பாம்புகள், பூச்சிகள், வண்டுகளினால் உண்டாகும் விஷக் கடியினைக் குறிப்பிடலாம். சித்தர்களின்