- Back to Home »
- பாதுகாப்பு கோரி பிரதமருக்கு மாயாவதி கடிதம் »
- பாதுகாப்பு கோரி பிரதமருக்கு மாயாவதி கடிதம் !
டெல்லி: பயங்கரவாதிகளின் ஹிட் லிஸ்டில் இருப்பதால் தமது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்றும் தமக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி கடிதம் அனுப்பியுள்ளார்.
மன்மோகனுக்கு அனுப்பிய கடிதத்தில், தமக்கு சிறப்பு பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மாயாவதிக்கு அவரது ஆட்சிக்காலத்தில் 400க்கும் மேற்பட்ட பாதுகாவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வென்று ஆட்சியைப் பிடித்த பிறகு அவருக்கான பாதுகாப்பு அடியோடு குறைக்கப்பட்டது.
இதையடுத்து தமது உயிருக்கு ஆபத்து என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு மாயாவதி கடிதம் அனுப்பியிருக்கிறார்..