சத்தீஸ்கர் மாநிலத்தில் கடத்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனனை மீட்க தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், மாவோயிஸ்ட் தரப்பு தூதுவர்கள் இன்று முதலமைச்சர் ரமன் சிங்கை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

ஆட்சியர் அலெக்சை மீட்கும் நடவடிக்கையில் மாவோயிஸ்ட் தரப்பு தூதுவர்களான ஷர்மா, ஹர்கோபால் ஆகியோர் முதலமைச்சர் ரமன் சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்துவது இதுவே முதல் முறை. 

அரசு மற்றும் மாவோயிஸ்ட் தரப்பு தூதுவர்கள் இடையே கடந்த மூன்று நாளில் நான்கு கட்ட பேச்சு வார்ததைகள் நடத்தப்பட்ட்ன. இதில், நேற்றைய பேச்சு வார்த்தையின்போது உடன்பாடு எட்டப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. 

அதன்படி, நல்லெண்ண நடவடிக்கையாக அலெக்ஸ் பால் மேனனை 48 மணி நேரததிற்குள் விடுவிக்க மாவோயிஸ்ட் தரப்பு ஒப்புக்கொண்டுள்ளது. அதேநேரத்தில், நிர்மலா புஜ் தலைமையில் ஒரு உயர்மட்ட குழுவை நியமிக்க சத்தீஸ்கர் அரசு ஒப்புக்கொண்டுள்ளது. 

இந்த குழு சிறைகளில் உள்ள பழங்குடியின மக்களுக்கு எதிரான வழக்குகளை மறுஆய்வு செய்யும் நிலைக்குழுவாக செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த குழுவில் சத்திஸ்கர் மாநில தலைமை செயலாளரும், காவல்துறை தலைவரும் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த குழு வழக்குகளை ஆய்வு செய்து மாநில அரசுக்கு தனது பரிந்துரைகளை வழங்கும் என்றும் அந்த பரிந்துரைகளை அரசு விரைவாக பரிசீலிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அலெக்ஸ் விடுவிக்கப்பட்ட ஒருமணி நேரத்தில, இந்த மறுஆய்வுக்குழு செயல்பாட்டிற்கு வரும் என்றும் அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -