- Back to Home »
- சாதிவாரி கணக்கெடுப்பில் தேவர் என்று பதிவு செய்ய வேண்டும் - தமிழ்நாடு தேவர் பேரவை கோரிக்கை
சாதிவாரி கணக்கெடுப்பு தமிழகமெங்கும் நடந்துவருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு தேவர் பேரவை இன்று கொடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது : " இந்த சாதிவாரி கணக்கெடுப்பில் தேவர் இன மக்கள் தங்களது சாதிப்பட்டியல் குறிப்பில் தேவர் என்றே குறிப்பிடவேண்டும். நாட்டில் ஆதிக் குடிகளான நமது இனத்தின் மனித வளம் பற்றி நாடும், நாட்டு மக்களும் அறிந்துகொள்ள இந்த சாதிவாரி கணக்கெடுப்பு மிகவும் இன்றியமையாது இருப்பதால் தங்கள் பதிவில் மிகவும் தெளிவுடன் இருக்கவேண்டும். உங்களது ஒவ்வொரு பதிவும் அரசியல், கல்வி மற்றும் வேலை வாய்ப்பு இட ஒதுக்கீட்டை தீர்மானிக்கக் கூடிய வல்லமை வாய்ந்தது என்பதை அனைவரும் உணர்ந்து தவறாது சாதிபட்டியலில் தமது அழுத்தமான பதிவினை காட்ட வேண்டும்" என்று குறிப்பிடப் பட்டுள்ளது.