- Back to Home »
- சென்னையில் ஆன்லைன் மூலம் 2.55 கோடி மோசடி »
- சென்னையில் ஆன்லைன் மூலம் 2.55 கோடி மோசடி
சென்னை.
சென்னையை மையமாக கொண்டு இயங்கும் டிராவல்ஸ் நிறுவனத்தில் ரூ. 2.55 கோடி மோசடி செய்ததாக மண்டல மேலாளர் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை நுங்கம்பாக்கத்தில் அக்பர் டிராவல்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந் நிறுவனத்தில் மேலாளர் ச. ராஜ்குமார் (48) அண்மையில் சென்னை பெருநகர காவல்துறையில் ஒரு புகார் கொடுத்தார்.
அப்புகாரில் அந்த நிறுவனத்தில் ஆன்லைன் பிரிவில் மும்பை மண்டல மேலாளராக பணிபுரிந்து வந்த மும்பை பரேல் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த வ.பிளேசன் வர்கீஸ் (35) ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் சேவையில் கடந்த 2 ஆண்டுகளில் ரூ. 2.55 கோடி வரை மோசடி செய்திருப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் அதில் குறிப்பிட்டு இருந்தார்.
இது தொடர்பாக குற்றப்பிரிவினர் பிளேசன் வர்கீஸ் மீது வழக்குப் பதிவு செய்து,வர்கீஸ்சை மும்பையில் கைது செய்தனர்.