புதுடில்லி: 

ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட்டுகளின் விலை ரூ. 5 இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட்டுகள் ரூ. 3 -க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தன. நடந்து முடிந்த பராளுமன்ற ரயில்வே பட்ஜெட்டில் ரயில்வே கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. 

இதைத்தொடர்ந்து ரயில்‌ கட்டணங்கள் வாபஸ் பெறப்பட்டன. ஆனால்
பிளாட்பாரம் டிக்கெட் விலை ஏற்றத்தில் மாற்றம் செய்யப்படவில்லை.
அதன்படி ரூ.3 லிருந்து ரூ.5 ஆக அதிகரிக்க மத்திய ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி இன்று முதல் அந்த உத்தரவு அமலக்கு வருகிறது. 

இந்த பிளாட்பாரம் டிக்கெட்டின் மதிப்பு இரண்டு மணி நேரம் மட்டுமே செல்லத்தக்கதாகும். இதற்காக வைக்கப்பட்டுள்ள தானியங்கி இயந்திரத்தில் புதிய விலையுடன் டிக்கெட்டுகள் வைக்க ரயில்வே வர்த்தகத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -