பார்வையற்றோர் கிரிக்கெட் போட்டி தமிழக முதல்வர் உதவிட கோரிக்கை


சென்னை


சமஸ்தானம் ட்ரஸ்ட் ஜெனரல் செகரட்டரி மஹன்தேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அவர் கூறியதாவது
எங்களின் பதிவு செய்யபட்ட அமைப்பின் சார்பில் லாப நோக்கம் இல்லாமல் இரு நாடுகளுக்கு இடையே நல்லூறவை மேம்படுத்த போட்டி நடத்தபடுகிறது
கடந்த 2011 ஆம் ஆண்டு ஒரு குழுவை தேர்வு செய்து பாகிஸ்தானுக்கு அழைத்து சென்றோம்
தற்போது சென்னை பார்வையற்றோர் கிரிக்கெட் சங்கம்,தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் உதவியால் இந்தியா,பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே சென்னையில் வரும் 10 தேதி முதல்,17 தேதி வரை ,ஜ,ஜ டி,மற்றும் ஒய் எம் சி மைதானத்தில் போட்டி நடக்கிறது
முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாசாரி,மேயர் துரைசாமி துவக்கிவைக்கின்றனர்,
இந்த இரு போட்டியில் வெற்றி பெறுபவர்கள் டிசம்பர் மாதம் நடைபெறும் உலக கோப்பை போட்டியில் கலந்துகொள்வார்கள்,
இதில் ஆஸ்திரேலியா,பங்களாதேஷ்,இங்கிலாந்து,பாகிஸ்தான்,தென்னாப்பிரிகா,மேற்கிந்திய தீவு,இலங்கை உள்ளிட்ட நாடுகள் பங்கு பெறுகிறது
போட்டிகளை நடத்த எந்த பெரிய நிறுவனங்களும் உதவி செய்யவில்லை,தமிழக முதல்வர் உதவி செய்வார் என்ற நம்பிக்கையில் மனு அளித்துள்ளோம்
இவ்வாறு தெரிவித்தார்,உடன் நிறுவன தலைவர் நாகேஷ்,மேலாளர் கிஷேர் ஜோசப் உள்ளிட்ட பலர் இருந்தனர்