- Back to Home »
- சாதிச் சான்றிதழ் தேவையில்லை »
- சாதிச் சான்றிதழ் தேவையில்லை! பள்ளி சேர்க்கை நடைபெறும் பள்ளி - வெங்கடேஸ்வரா மேட்ரிகுலேஷன் ஸ்கூல்
சென்னை திருமுல்லைவாயல் பகுதியில் வெங்கடேஸ்வரா மேட்ரிகுலேஷன் ஸ்கூல் அமைந்துள்ளது. மேல்நிலைப்பள்ளியான வெங்கடேஸ்வரா மேட்ரிகுலேஷன் ஸ்கூல் சாதிச் சான்றிதழ் இல்லாமல் சேர்க்கையை அனுமதிக்கும் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இங்கே சாதிச் சான்றிதழ் இல்லாமல் சேரும் மாணவர்களுக்கு எவ்வாறு சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது என்பது கேள்வியாகி உள்ளது. இதற்கு முன் தனது சான்றிதழில் "சாதி" என்ற இடத்தில் தமிழன் என்று நிரப்பி பட்ட அவஸ்தையை நாம் பத்திரிகை வாயிலாக அறிந்ததே. இப்படி சாதிச் சான்றிதழ் இல்லாமல் அனுமதிப்பது வரவேற்கத்தக்கதே , இருப்பினும் இன்றைய அரசின் கொள்கைப்படி சாதி குறிப்பிடாமல் சான்றிதழ் பெரும் மாணவர்களின் எதிர்கால வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகவே உள்ளது.
