சென்னை,
ஆவடி டேங்க் பேக்டரியில் ராணுவ டேங்கர் ஒன்றை பரிசோதனை செய்து கொண்டிருந்த போது அது இயக்குநரின் கட்டுப்பாட்டை இழந்து கட்டடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 27 வயது ஹரிஷ் என்ற ராணுவ வீரர் உயிரிழந்தார். மேலும் இருவர் காயமடைந்தனர்.
உயிரிழந்த ஹரீஷ், வேலூர் மாவட்டம் வாணியம்படியில் உள்ள ஆவாரம்குப்பத்தைச் சேர்ந்தவர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்கள் செயின்ட் தாமஸ் மௌன்டில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.