கிருஷ்ணகிரியில் அதிகாலையில் விபத்து சிறுமி பலி

கிருஷ்ணகிரி,

பெங்களூரை சேர்ந்த தொழில் அதிபர் ஹரீஸ் (40) என்பவர் மனைவி மற்றும் உறவினர்களுடன் கோவில் விழாவுக்காக வேலூர் மாவட்டம் சோளிங்கர் அருகே உள்ள வீரகுப்பம் கிராமத்திற்கு ஜீப்பில் வந்து கொண்டு இருந்தார். ஜீப்பை ஹரீஸ் ஓட்டி வந்தார். இன்று அதிகாலை 5-45 மணியளவில் ஜீப் கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலை பெத்தாம்பட்டி என்ற இடம் அருகே சென்றது.

அதே போல் பெத்தாம்பட்டியில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு ஒரு மினி பஸ் தேசிய நெடுஞ்சாலையை கடந்தது. இதை சற்றும் எதிர் பார்க்காத ஜீப்பை ஓட்டி வந்த ஹரீஸ் மினி பஸ்சின் பக்கவாட்டில் உள்ள டீசல் டேங்கில் பயங்கரமாக மோதினார். இதில் டீசல் டேங்க் உடைந்து திடீரென தீ பிடித்துக் கொண்டது.
இந்த விபத்தில் காரில் இருந்த மோனிசா (13) என்ற சிறுமி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டாள்.

இந்த விபத்தில் காரில் இருந்த தொழில் அதிபர் ஹரீஸ், அவரது மனைவி விஜயா (35), வாசு (35), பாபு (30), பத்மா (35), ஜான் (10), ரோகித் (9) மற்றும் 9 மாத கைக்குழந்தை ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மேலும் மினி பஸ்சில் இருந்த 20 பயணிகளும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் 28 பேரும் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காரில் வந்த 8 பேரும் மேல் சிகிச்சைக்காக பெங்களூர் அனுப்பி வைக்கப்பட்டனர்.