- Back to Home »
- இமாச்சலுக்கு 5லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை »
- இமாச்சலுக்கு 5லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை
புதுடில்லி
இமாச்சல் பிரதசே மாநிலத்திற்கு வருகை தரும் வெளிநாட்டு சுறறுலா பயணிகளின் எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்கியுள்ளதாக மாநில சுற்றுலா வளர்ச்சி கழகம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் சுமார் 32 ஆயிரம் பேர் அதிகம் எனவும், கடந்த 2010-ம் ஆண்டில் 4லட்சத்து 53 ஆயிரம் பேர் வந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாபயணிகளின் எண்ணிக்கை சுமார் 6.29 மில்லியனாகும். பெரும்பாலும் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களே மிக அதிகம். இமாச்சல் பிரதேசத்தி்ல் சுற்றுலா இடங்கள் அதிகமாக இருந்தாலும் குலு, மணாலி, காங்ரா, போன்றவற்றிற்கு அடுத்தபடியாக புத்த மத தலைவர் தங்கியுள்ள இடமான தர்மசாலா முக்கிய பங்கு வகிக்கிறது. ஆண்டு தோறும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நேரத்தி்ல் இந்தாண்டு ஐந்து லட்சத்தையும் தாண்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக மாநில சுற்றுலாவளர்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.