- Back to Home »
- 10 ஐ.ஏ.எஸ். , அதிகாரிகள் இடமாற்றம் »
- 10 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்
சென்னை
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 10 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை கலெக்டராக இருந்த மதுமதி தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் சிறப்பு டி.ஆர்.ஓ.,ஆக இருந்த கலையரசி சென்னை மாநகராட்சி மத்திய மண்டல துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பத்தூர் சர்க்கரை ஆலை தனி அலுவலராக இருக்கும் மோகன்ராஜ் சென்னை மாநகராட்சி தெற்கு மண்டல துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். தேவ்ராஜ் தேவ் மனித உரிமை கமிஷன் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். மனித உரிமை கமிஷன் செயலராக இருந்த ஜெயராமன் வருவாய் நிர்வாகம் இணை கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சி.எம்.டி.ஏ., தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் செந்தில்குமார் சர்க்கரை துணை கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு சேமிப்பு கிடங்குகள் கழகம் பொது மேலாளர் பதவி வகித்த கோவிந்தராஜ் ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் முதுநிலை மண்டல மேலாளர் பதவி வகித்த மனோகரன் கூட்டுறவு சங்கங்கள் கூடுதல் பதிவாளராகவும், பெரம்பலூர் சர்க்கரை ஆலை தலைமை செயல் அலுவலராக இருந்த ஜெயந்தி சென்னை கலெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனராக சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.