நீதிபதியுடன் ஜெயேந்திரர் பேசிய விவகாரம்
டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, 

சங்கரராமன் கொலை வழக்கை விசாரித்த நீதிபதியுடன் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் தொலைபேசியில் பேசிய விவகாரம் குறித்து குற்றப் பிரிவு உதவி போலீஸ் கமிஷனர் சுதாகர் ஐபிஎஸ் அல்லது அதே அந்தஸ்துள்ள அதிகாரி ஒருவரை நியமித்து விசாரணை நடத்துமாறு காவல்துறை தலைவருக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் கே.என்.பாஷா மற்றும் என்.பால்வசந்தகுமார் ஆகியோர் உத்தரவிட்டனர்.

மேலும் இதுகுறித்து விசாரித்து 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -