முன்னாள் அமைச்சர்கள் பெரியகருப்பன்,தமிழரசி வீடுகளில்
அதிரடி சோதனை


சென்னை


கடந்த தி.மு.க. ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்தவர் கே.ஆர்.பெரியகருப்பன்
.  சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக தற்போது உள்ளார்.
  சட்டப்படியான வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்து இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையினர்

 திருப்பத்தூர் அருகே உள்ள அரளிகோட்டையில் உள்ள பெரியகருப்பன் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

 .கடந்த தி.மு.க. ஆட்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் தமிழரசி. இவரது வீடு மதுரை அய்யர்பங்களா பகுதியில் உள்ளது

. இன்று காலை 7 மணிக்கு நெல்லை லஞ்ச ஒழிப்பு துணை சூப்பிரண்டு தங்கச்சாமி தலைமையில் 8 பேர் தமிழரசி வீட்டுக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
வீட்டில் இருந்த முன்னாள் அமைச்சர் தமிழரசி, அவரது கணவர் ரவிக்குமார் ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது. சோதனையில் சொத்து ஆவணங்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -