கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு .தமிழக அரசு வல்லுநர் குழு அமைப்பு



கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு குறித்து
 தமிழக அரசு வல்லுநர் குழு அமைப்பு


சென்னை

தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி,வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.

 தமிழக முதல்வர் ஜெயலலிதா , தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில்,ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலளித்துப் பேசுகையில்

,  மத்திய அரசால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு நடத்திய கூட்டங்களின் போது எழுப்பப்பட்ட பல்வேறு சந்தேகங்கள் / வினாக்களுக்கு பதிலளித்ததோடு கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது
  என்பது குறித்த 77 பக்க அறிக்கையையும் அளித்தது எனவும், 31.1.2012 அன்று நடைபெற்ற இந்த வல்லுநர் குழுவின் கடைசிக் கூட்டத்தில் இந்த வல்லுநர் குழு, மேலும் ஒரு அறிக்கையை அளித்ததுடன்


, இக்குழுவின் பணி முடிவுற்றதாக அறிவித்துள்ளது என்றும் தெரிவித்து, கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு குறித்தும்;

 அப்பகுதி மக்களிடையே இது குறித்து தற்போது நிலவி வரும் எண்ணங்கள் மற்றும் அச்ச உணர்வுகள் குறித்தும் அறிந்து, மாநில அரசுக்கு விரைந்து அறிக்கை அளிக்கும் வகையில், மாநில அரசால் ஒரு வல்லுநர் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில், தமிழக முதல்வர்
  ஜெயலலிதா உத்தரவின் பேரில் .

பேராசிரியர் எம்.ஆர். சீனிவாசன்
(முன்னாள் தலைவர், அணுமின் சக்தி கழகம்)
கோத்தகிரி, நீலகிரி.

டாக்டர் டி. அறிவு ஒளி,
பேராசிரியர், இயற்பியல் துறை, அண்ணா பல்கலைக்கழகம்.

டாக்டர் எஸ். இனியன்,
பேராசிரியர் மற்றும் இயக்குநர், எரிசக்தி ஆய்வு மையம்,
அண்ணா பல்கலைக்கழகம்.

. எல்.என். விஜயராகவன்,
தலைமைச் செயலர் நிலையில் ஒய்வு பெற்ற அதிகாரிஆகியோர் உறுப்பினர்களாக கொண்டு ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது

வல்லுநர் குழுவின் அமைப்பாளராக டாக்டர் எஸ். இனியன்   செயல்படுவார் என தெரிவிக்கபட்டுள்ளது