அதிகரிக்கும் சிறிய படங்களின் வருகை..!

பெரிய நடிகர்கள், தயாரிப்பாளர்களின் படங்களை குறிப்பிட்ட எட்டு தினங்களில் மட்டுமே வெளியிட வேண்டும் என்ற தயாரிப்பாளர்கள் சங்க கட்டுப்பாட்டை அடுத்து தமிழ் சினிமாவில் முடங்கி கிடந்த சிறிய படங்களின் வருகை அதிகரித்துள்ளது.

நாளை (10.02.2012) வெள்ளியன்று மட்டும் ஒன்பது படங்கள் திரைக்கு வரவிருக்கிறது. பிரகாஷ் ராஜின் 'டோனி ', சோனியா அகர்வால் நடித்த  'ஒரு  நடிகையின்  வாக்குமூலம்', 'விளையாட வா', 'ஒரு மழை நான்கு சாரல்' , 'சூழ்நிலை', 'உச்சிதனை  முகர்ந்தால்' , 'வாச்சாத்தி', 'ருத்ர பூமி' 'எங்கடா உங்க மந்திரி' ஆகிய படங்கள் நாளை வெளியாகிறது.

இது வரை பெரிய படங்களின் ஆக்கிரமிப்பால் திரையரங்கு கிடைக்காமல் தவித்து வந்த படங்கள் இனி உடனுக்குடன் வெள்ளித்திரை காணும் பாக்கியம் கிடைத்துள்ளது குறித்து தமிழ் திரையுலகம் மகிழ்ச்சியில் உள்ளது.