இலங்கை விவகாரத்தில் 15  நிமிடம் உண்ணாவிரதம் இருந்த கருணாநிதி கருத்துக்கு மதிப்பளிக்க தேவையில்லை
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க தலைவர் உதயகுமார் கிண்டல்



சென்னை



இலங்கை விவகாரத்தில் 15  நிமிடம் உண்ணாவிரதம் இருந்த கருணாநிதி கருத்துக்கு மதிப்பளிக்க தேவையில்லை
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க தலைவர் உதயகுமார் கூறினார்

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க தலைவர் உதயகுமார் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்

கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சனையில் மாநில அரசு குழு நியமித்துள்ளதை நாங்கள் நல்ல அறிகுறியாக கருதுகிறோம்
 மத்திய அரசு நியமித்த குழு நாங்கள் கேட்ட முக்கியமான மக்கள் பிரச்சனை குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை
இந்நிலையில் தமிழக முன்னாள் முதல்வர் கூடங்குளம் தொடர்பாக தீர்மானம் போட்டுள்ளார்
இலங்கை விவகாரத்தில் 15  நிமிடம் உண்ணாவிரதம் இருந்த கருணாநிதி கருத்துக்கு மதிப்பளிக்க தேவையில்லை
வெளிநாட்டிலிருந்து பணம் வாங்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை
அணு உலைக்கு எதிரான கருத்து உடைய தலைவர்களை கொண்டு சென்னையில் வரும் 26 ந் தேதி மாநாடு நடத்தபடுகிறது
இதில் இராமதாஸ், தொல் திருமாவளன்,பழ நெடுமாறன், கொளத்துர்மணி,ஜவாஹிருல்லா, உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றர்
இவ்வாறு அவர் தெரிவித்தார்
உடன் கொளத்துர் மணி உள்ளிட்ட கலந்து கொண்டர்

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -