சிறந்த நிர்வாகி முதல்வர் ஜெயலலிதாவிற்க்கு
அமெரிக்க நிறுவனம் பாராட்டு,


தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறந்த நிர்வாகி   என்றும், தமது கூரிய அறிவுத்திறத்தால் பல மாற்றங்களை அவர் செய்து வருவதாக அமெரிக்காவின் வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் லாபநோக்கில்லாத பொது நிறுவனம் புரூக்கிங்ஸ் இன்ஸ்ட்டிடியூசன் பாராட்டு தெரிவித்துள்ளது

 இதுகுறித்து, புரூக்கிங்ஸ் இன்ஸ்ட்டிடியூசன் நிறுவன நிர்வாக இயக்குனர் வில்லியம் ஜே. அந்தோலிஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
 எங்களது நிறுவனம், பொதுவாக பொருளாதாரம், மெட்ரோபாலிடன் பாலிசி, நிர்வாகம், வெளியுறவுக்கொள்கை, உலகப் பொருளாதாரம் மற்றும் மேம்பாடு உள்ளிட்ட கல்வி மற்றும் சமூகம் சார்ந்த நிகழ்வுகளில் மட்டும் ஆய்வு செய்து வந்துள்ளது. ஆனால், தற்போது தான் முதல்முறையாக, ஒரு இந்திய அரசியல் தலைவர் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா, கூர்மையான அறிவுத்திறத்தால், அவர் மேம்படுவதோடு அல்லாது, தன் தலைமமையிலான மாநிலத்தையும் மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். இதன்காரணமாகவே, அவர் கொள்கை ரீதியாகவும் மற்றும் அரசியல் ரீதியாகவும் விவேகமுள்ள நிர்வாகியாக திகழ்வதாகவும். தங்களது நிறுவன இணையதளத்தில், முதல்வர் ஜெயலலிதா குறித்த தகவல்கள் ஸ்டார் வார்ஸ் 3 : ஜெயலலிதா ஸ்டிரைக்ஸ் பேக் (Star Wars III: Jayalalitha Strikes Back')என்ற பக்கத்தில் இடம்பெற்றுள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -