சென்னை

கூடங்குளத்தில் அணு மின் நிலையம் பணிகளை துவங்க கூடாது,உடனடியாக அணு உலையை மூடவேண்டும் என உதயகுமார் தலைமையில் பொதுமக்கள் போராடிவருகின்றனர்
தமிழஅரசு இது தொடர்பாக குழு ஒன்றை நியமித்து நேற்று அதன் அறிக்கையை தமிழக முதல்வரிடம் அளித்த நிலையில் தற்போது,இன்று மாலை 3 மணிக்கு
உதயகுமார்,சிவசுப்பிரமணியம்,புஷ்பராஜ், உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழுவினர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை 20 நிமிடம் சந்தித்து பேசினர்,


உதயகுமார் பேட்டி


முதல்வரை சந்தித்தபின் செய்தியாளர்களுக்கு உதயகுமார் அளித்த பேட்டி

தமிழஅரசு நியமித்த இனியன் குழு மக்களை சந்திக்கவில்லை,,முதல்வரின் சந்திப்பு எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது,எந்த வெளிநாட்டு தொண்டு நிறுவனத்திடமிருந்தும் பணம் பெறவில்லை என்பதை முதல்வருக்கு விளக்கினோம்,எனது வங்கி கணக்கு சொத்து விபரம் ஆகியவற்றை முதல்வரிடம் காட்டினோம் தமிழகஅரசின் தீர்மானத்தை மதிக்காமல்,மத்திய அரசின் அணு சக்தி முறையினர் ரகசியமாக வந்து பணியை துவக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டுவருவதையும் தெரிவித்தோம், எங்களுக்கும் சிந்திக்கும் திறன் உண்டு, கூலிக்கு மாறடிக்கும் கூட்டம்என்று சித்தரிப்பதை முதல்வருக்கு தெரிவித்தோம்,மத்திய அரசு தொடர்ந்து எங்கள் மீது உளவியல் ரீதியான தாக்குதலை தொடுத்துவருகிறது,
போராட்டம் நடத்த எங்களுக்கு உரிமை உண்டு,எங்களுக்கு எம்,எல்,ஏ,எம்.பி ஆக வேண்டும் என்று விருப்பம் கிடையாது,அரசியலுக்காக நாங்கள் இந்த போராட்டத்தை செய்யவில்லை என்றும் எங்கள் பகுதி மக்களைமுதல்வர் வந்து சந்திக்க வேண்டும் என முதல்வரிடம் தெரிவித்தோம், மேலும் ஜெயின்,அப்துல்கலாம்,காசிநாத் போன்றவர்கள் அணு கழிவுகள் வெளியேற்றம் குறித்து தெளிவுபடுத்தவில்லை என தெரிவித்தோம்,முதல்வரும் உன்னிப்பாக நாங்கள் கூறியதை கேட்டார்,
முதல்வர் மீது எங்களுக்கு நம்பிக்கையுள்ளது,
இவ்வாறு கூறினார்,

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -