சென்னை,
 கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்துக்கு எதிரான போராட்டத்திற்கு அ.தி.மு.க அரசு மறைமுக ஆதரவு அளித்து வருவதாக தி.மு.க தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய கருணாநிதி கூடங்குளம் அணுமின் நிலையம் மின் உற்பத்திக்கு தயாராக உள்ள போதிலும் இதற்கு எதிப்பு தெரிவித்து ஒரு சிலர் போராட்டம் நடத்தி வருவதாக தெரிவித்தார். தற்போது பார்க்கையில் இந்த போரட்டத்துக்கு ஜெயலலிதா அரசு மறைமுக ஆதரவு வழங்குவது போல் உள்ளது என்றும் இந்த விவகாரத்தில் மாநில அரசு ஏன் மவுனம் காக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கடந்த தி.மு.க., ஆட்சி காலத்தில் மின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது என அவர் தெரிவித்தார்.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -