சென்னை,

மதுபானக் கடைகளின் விற்பனை நேரத்தை அதிகரிக்கக்கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

மதுபானக் கடைகளை கூடுதலாக 2 மணி நேரம் திறந்துவைக்க தமிழக அரசு வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மக்கள் நலனுக்கு எதிரான அரசின் இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.

தெருவுக்குத் தெரு மதுபானக் கடைகள் திறக்கப்பட்டிருப்பதால் இளைய சமுதாயம் சீரழிந்து வருகிறது. இந்த நிலையில் மதுக்கடைகள் திறந்திருக்கும் நேரத்தை அதிகரிப்பது குடும்ப வாழ்க்கை, சட்டம், ஒழுங்கு, கலாச்சாரம் ஆகியவை சீரழிய வழிவகுக்கும், எனவே மதுக்கடைகளின் விற்பனை நேரத்தை அதிகரிக்கும் முடிவை கைவிட்டு படிப்படியாக மதுக்கடைகளின் விற்பனை நேரத்தை குறைத்து முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்த அரசு முன்வர வேண்டும். இல்லாவிட்டால் பாமக சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -