இந்திய அணி, இன்றைய போட்டியில் போனஸ் புள்ளியுடன் வெற்றி பெற்றதால், இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. இன்று 40 ஓவருக்குள் 321 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, துவக்கத்திலிருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. ஆனால், சேவக் மற்றும் சச்சின் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது. இந்திய அணி 37 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. கோஹ்லி அபாரமாக விளையாடி 86 பந்துகளில் 133 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -